2 வயது குழந்தை ஆன் லைனில் ஆபாச படம் பார்ப்பதாக அதிர்ச்சி தகவல்

குழந்தைகள் மற்றும் இளைய சமூதாயத்தினரை ஆன்லைனில் உள்ள ஆபாச வீடியோ மற்றும் படக்காட்சிகள் வன்முறை மற்றும் பாலியல் வன்முறை செயல்களுக்கு தூண்டுவதாக ஒரு சர்வேயில் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.பிரிட்டனில் 30 லட்சம் குடும்பங்களில் உள்ள குழந்தைகள் ஆன் லைனில் ஆபாச படம் பார்ப்பதாக தகவல் வெளியிடபட்டு உள்ளது.5 ல் 2 பங்கு குடுமபத்தினர் இதை கண்டறிந்து இதை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர்.                                 

பிரிட்டனை சேர்ந்த நடிகை அமண்டா செய்பிரிடு தனது 6 வயதில் ஆபாச படங்களை பார்த்ததாக ஒரு பேட்டியில் கூறி இருந்தார் எண்பது குறிப்பிடதக்கது.

சர்வே நடத்திய ஆன் லைன் நிபுணர் மேரி லூயிஸ் அப்ரிட்டி கூறியதாவது:-

எங்களது ஆய்வாளர்கள் திரட்டிய தகவலில் இளம் வயதில் ஆன் லைனில் ஆபாச உள்ளடக்கங்களை தேடும் குழந்தைகளின் விகிதம் கவலை அடையச்செய்து உள்ளது.

தற்போது குழந்தைகள் வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டர்களை மட்டும் பயன்படுத்துவது இல்லை.

கையடக்க சிறிய சாதனங்களான ,டேப்லட்ஸ், ஸ்மார்ட்போன்கள், டேப்ஸ், என பல்வேறு வகையான சாதனங்களை பயன்படுத்து கின்றனர் இதில் அனைத்திலும் இணையதள இணைப்பு உள்ளது.சில கண்டிப்பான பெற்றோர்கள் அவர்களுக்கு கொடுக்கபடும் சாதனங்களை கண்காணிக்கின்றனர்.

சர்வேயில் பெற்றோர்கள் வளர்ந்து வரும்- கிடைக்கும் இணைய தொழில்நுட்பம் சமாளிக்க வீட்டில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மோர்ட்போன் இணைப்புகளில் ஆபாச உள்ளடக்கததை வடிகட்ட போராடி வருகின்றனர். மூன்றில் இரண்டு பங்கு குடும்பத்தினர் கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் போன்களில் எந்த வித கட்டுப்பாடும் தெரிவிப்பது இல்லை.
குழந்தைகளுக்கு உரிய ஸ்மார்ட் போன்களில் வரும் ஆபாச விஷயங்களை எளிதில் கட்டுப்படுத்த முடியும். என்று கூறினார்.