டுவென்டி-20 இந்தியா அரையிறுதிக்கு தகுதி

உலக கோப்பை டுவென்டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த சூப்பர் 10 லீக் போட்டி யில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்துள்ளது. இதன் பின்னர் களமிறங்கியுள்ள இந்திய அணி 18.3ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து 8 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில் அரையிறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.