உலக கோப்பை டுவென்டி-20 கிரிக்கெட்: இந்தியா வெற்றி

மிர்பூர் : உலக கோப்பை டுவென்டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன.
                                           
ஷிகார் தவான் நீக்கப்பட்டு ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். முகமது சமி நீக்கப்பட்டு மோகித்சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் யுவராஜ் 60 ரன்களும், தோனி 24 ரன்களும், கோஹ்லி 23 ரன்களும் எடுத்தனர். இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 16.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 86 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.