சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு தூக்கு உறுதி

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் கோபரி கிராமத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி 5 வயது சிறுமி வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் தத்தாத்ரே ரோகடே (54) என்பவர், சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் சிறுமியின் உடலை பிளாஸ்டிக் பையில் அடைத்து வெளியில் விசியுள்ளார்.
                                 சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு தூக்கு உறுதி

இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகடேவை கைது செய்தனர். வழக்கை விசாரித்த தானே அமர்வு நீதிமன்றம் ரோகடேவின் மகன், மனைவி, மகள் உட்பட 27 சாட்சிகளிடம் 45 நாள்களில் விசாரணை நடத்தியது. பின்னர் ரோகடேவுக்கு மரண தண்டனை அளித்தது.

இதனை எதிர்த்து ரோகடே மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தாகில்ரமணி மற்றும் அக்லியா ஆகியோர் கொண்ட பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது. அப்போது தத்தாத்ரே ரோகடேவுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர்.