பரோட்டோ சூரிக்கு அடித்த யோகம்

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டோக்களை அசராமல் சாப்பிட்டு கடைக்காரரை அசரவைத்ததுடன், நம்மையும் சேர்த்த அசரவைத்தவர் சூரி. அதனால் தான் இன்று வரை அவர் பரோட்டோ சூரி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
                                    

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, நிமிர்ந்துநில், என சூரி அடுத்தடுத்து நடித்த படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன், சில படங்கள் வெற்றியும் பெற்றதால், அவர் மீது ஹீரோக்கள், மற்றும் இயக்குநர்களின் பார்வை திரும்பியுள்ளது. அதே நேரத்தில் சந்தானம் சமீபத்தில் நடித்த படங்கள் ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை.

மேலும் படங்களும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சந்தானத்திற்கு பின் காமெடியில் அதிகமாக தற்போது ரசிக்கப்படுபவர் சூரி என்பதால் அவரது மார்க்கெட் உயர்ந்துள்ளது. மேலும் இதற்கு சந்தானத்தின் ஹீரோக்களுக்கு நிகரான ஊதியமும், ஒரு காரணம். இந்நிலையில் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி வரும் சூரி, தற்போது கணிசமாக சம்பளத்தை உயர்த்திவிட்டதாக கோடம்பாக்க வட்டாரத்தில் கூறப்படுகிறது.