ஐபிஎல் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கக் கூடாது : உச்ச நீதிமன்றம் பரிந்துரை


நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கக் கூடாது என்று பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.


கடந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க அனுமதிகக் கூடாது என்று ஐபிஎல் சூதாட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிசிசிஐக்கு பரிந்துரை செய்துள்ளது.