கேப்டனின் பதவியில் மகேந்திர சிங் தோனி நீடிப்பாரா ?

கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தினால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் டோனி கேப்டன் பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
                                                  Dhoni-29th-March

மேலும், அந்த அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனிடம் நேற்று தொலைபேசி வாயிலாக தோனி பேசியதாகவும், அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் பதவியில் இருந்தும் டோனி பதவி விலக விரும்புவதாகவும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.