டிப்ளமோ முடித்தவர்களுக்கு அணு ஆராய்ச்சி மையத்தில் பணி

பாபா அணு ஆராய்ச்சி மையதில் காலியாக உள்ள Scientific Assistant/ B (Civil) பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
                                       

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 11

பணி: Scientist Assistant/B (Civil)

கல்வி தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 15.04.2014 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: Screening Test மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ.29.365

விண்ணப்பிக்கும் முறை: www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு தேவையான சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் (அட்டெஸ்ட் பெற்றது) எடுத்துக் கொண்டு ஸ்கிரீன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது கொண்டு வரவேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.