ICC 20/20 இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று பலப்பரீட்சை

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதன் ‘சூப்பர் 10’ சுற்று ஆட்டம் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் விளையாடும் 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
                                         20 ஓவர் உலக கோப்பை: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று பலப்பரீட்சை

‘குரூப் 1’ பிரிவில் இலங்கை, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும், ‘குரூப்2’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு நுழையும்.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 2–வது ஆட்டத்தில் இந்திய அணி இன்று வெஸ்ட் இண்டீசை எதிர் கொள்கிறது.

பாகிஸ்தானை எளிதில் வென்றதுபோல வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவும் இந்திய வீரர்கள் அதிரடியை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவான், வீராட் கோலி, ரெய்னா, கேப்டன் டோனி ஆகியோரது அதிரடி ஆட்டத்தை பொறுத்து இந்திய அணியின் ரன் குவிப்பு இருக்கிறது.

வெஸ்ட்இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல், சாமுவேல்ஸ், கேப்டன் டாரன் சேமி, வெயின் பிராவோ, சுமித் போன்ற சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இந்திய பவுலர்களால் இவர்களது அதிரடியை சமாளிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் விடக்கூடிய வகையில் வெஸ்ட்இண்டீஸ் உள்ளது.

20 ஓவர் போட்டியில் இரு அணிகளும் இன்று மோதுவது 4–வது முறையாகும். இதுவரை நடந்த 3 ஆட்டத்தில் இந்தியா ஒரே ஒருமுறை வெற்றி பெற்றது. வெஸ்ட்இண்டீஸ் இரண்டு ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடரும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் தூர்தர்ஷன் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: டோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித்சர்மா, வீராட் கோலி, யுவராஜ்சிங், ரெய்னா, ரகானே, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், ஸ்டூவர்ட் பின்னி, மொகித் சர்மா, அமித் மிஸ்ரா, வருண் ஆரோன்.

வெஸ்ட்இண்டீஸ்: டாரன்சேமி (கேப்டன்), கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, லெண்டில் சிம்மனஸ், சாமுவேல்ஸ், வெய்ன் சுமித், ரஸ்சல், ராம்தின், ராம்பால், சுனில் நரீன், சேன்டோக், கோட்ரெல், சார்லஸ், பத்ரி பிளட்சர்.