IPL கிரிக்கெட் போட்டிகளுக்கான கால அட்டவணை

ஐக்கிய அரபு குடியரசில் நடைபெறவிருக்கும் முதல் கட்ட ஐபிஎல்கிரிக்கெட் போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.மக்களவை தேர்தல் நடைபெறுவதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி,ஐபிஎல் போட்டிகளை மூன்றுகட்டங்களாக நடத்த முடிவெடுக்கப்பட்டது.
                                            

அதன்படி மொத்தமுள்ள 60 போட்டிகளில் முதல் பகுதி போட்டிகளை ஐக்கிய அரபு குடியரசிலும்,இரண்டாவது பகுதியை இந்தியா அல்லது வங்கதேசத்திலும்,மூன்றாவது நடைபெறும் இறுதி கட்டப்போட்டிகளை இந்தியாவிலும்நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு குடியரசில் ஏப்ரல் 16முதல் ஏப்ரல் 30வரை நடைபெறவிருக்கும் முதல் கட்ட போட்டிகளுக்கானஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

3 மைதானங்களில் நடைபெறும்20 போட்டிகளில், மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, சென்னை, பஞ்சாப்,ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகள் பங்கேற்கின்றன. அபுதாபியில் ஏப்ரல்16ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில்,நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. 

சென்னை அணியை பொறுத்தவரை ஏப்ரல் 18ஆம் தேதி ஹைதராபாத் அணியுடனும்,ஏப்ரல் 21ஆம் தேதி டெல்லி அணியுடனும், ஏப்ரல் 23ஆம் தேதி
ராஜஸ்தான் அணியுடனும் விளையாடுகிறது. வரும் ஏப்ரல் 25ல் மும்பை அணியுடனும்,ஏப்ரல் 27ஆம் தேதி ஹைதராபாத் அணியுடனும் சென்னை அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.