ITI,DIPLOMA முடித்தவர்களுக்கு தில்லி மெட்ரோ கழகத்தில் பணி

தில்லி மெட்ரோ ரயில் கழகத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
                                  

பணி: Station Controller/Train Operator(ST/TO)

காலியிடங்கள்: 98

சம்பளம்: மாதம் ரூ.13,500 - 25,520

கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல், கணித துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Customer Relations Assistant(CRA)

காலியிடங்கள்: 234

சம்பளம்: மாதம் ரூ.10,170 - 18,500

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Engineer/Electrical

காலியிடங்கள்: 89

சம்பளம்: ரூ.13,500 - 25,520

கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Engineer/Electronics

காலியிடங்கள்: 89

சம்பளம்: ரூ.13,500 - 25,520

கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Engineer/Mechanical

காலியிடங்கள்: 35

சம்பளம்: ரூ.13,500 - 25,520

கல்வித்தகுதி: மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Engineer/Civil

காலியிடங்கள்: 32

சம்பளம்: ரூ.13,500 - 25,520

கல்வித்தகுதி: சிவில் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Maintainer

காலியிடங்கள்: 570

சம்பளம்: ரூ.8,000 - 14,140

கல்வித்தகுதி: Electrician, Fitter, Electronic Mechanic,Ref& AC Mechanic போன்ற துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக கட்டணம்: ரூ.400. எஸ்சி. எஸ்டி பிரிவினருக்கு ரூ.150. இதனை செலுத்துவதற்கான செல்லான் படிவங்களை www.delhimetrorail.com இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து (SBI) DMRC Account No.33700092265 என்ற வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.delhimetrorail.com என்ற இணையதளத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்பு பதிவு எண்ணுடன் கூடிய ஆன்லைன் படிவத்தின் இரண்டு நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

ஆன்லைன் படிவத்தின் ஒரு நகலில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டி நீல மை பேனாவால் கையெழுத்திட வேண்டும். உரிய இடத்தில் இடத்தில் இடதுகை பெருவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். மேலும் ஆன்லைன் படிவத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Declaration பத்தியை ஆங்கில சுட்டெழுத்தில் எழுத வேண்டும். பின்னர் ஆன்லைன் விண்ணப்ப படிவ நகலை சாதாரண அஞ்சலில் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

DMRC LIMITED,POST BAG NO.9, LODHI ROAD POST OFFICE, NEW DELHI - 110003.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2014

ஆன்லைன் படிவ நகல் சாதாகரண அஞ்சலில் சென்று கடைசி தேதி: 22.04.2014

மேலும் தேர்வு முறைகள், தேர்வு மையங்கள், எழுத்துத் தேர்வு பற்றிய முழுமையான விவரங்கள் அறிய www.delhimetrorail.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.