ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்ததால் பிளஸ்–1 மாணவர் கொலை

சிதம்பரத்தில் பிளஸ்–1 மாணவர் கொலையில் ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்ததால் மாணவரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்றதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
                                              

பிளஸ்–1 மாணவர்

சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர். இவரது மனைவி உமையபார்வதி (38). இவர்களுக்கு சுகன்யா(18) என்ற மகளும், சூரியபிரகாஷ்(16) என்ற மகனும் இருந்தனர்.

சூரியபிரகாஷ், சிதம்பரத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 தேர்வு எழுதி விட்டு பிளஸ்–2 வகுப்பிற்காக டியூசன் சென்று வந்தார்.

மாயம்

கடந்த 21–ந் தேதி மாலை டியூசனுக்கு சென்ற சூரியபிரகாஷ் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது சைக்கிள் மட்டும் குடியிருப்பு வளாகத்தில் நின்றது. சைக்கிளை குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி விட்டு எங்கே சென்றிருப்பான் என்று பயந்து போன பெற்றோர் சூரியபிகாசின் செல்போனை தொடர்பு கொண்டனர். ஆனால் அது ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டிருந்தது.

போலீசார் விசாரணை

எனினும் கந்தசாமி தனது உறவினர்கள் பலருக்கும் செல்போனில் தொடர்பு கொண்டு மகன் காணாமல் போன் விவரத்தை கூறினார். இதில் சூரியபிரகாஷின் பெரியம்மா அலமேலு மங்கை தனது செல்போன் மூலம் சூரியபிரகாசின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது உடனே ‘லைன்‘ கிடைத்தது

ஆனால் சூரியபிரகாஷின் செல்போனில் பேசியவன் ஒரு மர்ம ஆசாமி. அந்த ஆசாமி தனக்கு ரூ.25 லட்சம் கொடுத்தால் சூரியபிரகாஷை ஒப்படைத்து விடுவதாக கூறி செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதையறிந்து திகைத்து போன பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியபிரகாசை 2நாட்கள் தேடி பார்த்தும் எந்த தகவலும் இல்லை. இருப்பினும் சூரியபிரகாஷின் செல்போன் சிக்னலை போலீசார் கண்காணித்து வந்தனர்.

மாணவர் கொடூரக் கொலை

இந்தநிலையில் 23–ந் தேதி அன்று இரவு சூரியபிரகாஷ் வீட்டின் கீழ் தளத்தில் பூட்டப்பட்டிருந்த ஒரு ஓட்டலில் இருந்து துர்நாற்றம் வீசியதுடன் ரத்தமும் வெளியேறியது. அந்த ஓட்டல் அதே குடியிருப்பில் வசிக்கும் ஜவகர்பாபு என்பவருக்கு சொந்தமானது.

அந்த ஓட்டல் முன்பு ஜவகர்பாபு பினாயிலை தெளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மாணவனின் பெற்றோர் ஜவகர்பாபுவிடம் ஓட்டலை திறக்க கூறியபோது அவர்அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே அங்கிருந்தவர்கள் ஜவகர்பாபு மற்றும் அவரது மனைவி ஆரவள்ளியை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

. இதனையடுத்து ஜவகர்பாபுவின் ஓட்டலை திறந்து பார்த்தபோது அங்கு ஒரு சாக்குமூட்டையில் சூரியபிரகாஷ் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தான்.

ஓட்டல் உரிமையாளர் கைது

இதனையடுத்து அவனது உடலை போலீசார் கைப்பற்றிறி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் ஓட்டல் உரிமையாளர் ஜவகர்பாபு, அவரது மனைவி ஆரவள்ளி, தம்பி வசந்த் ஆகிய 3 பேரிடம் விசாரித்தனர்..

அதில் ஜவகர்பாபு முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார். பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மாணவன் சூரியபிரகாஷை, தான் மட்டும் கொன்றதாக ஒப்புக்கொண்டு ஜவகர்பாபு போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு

எனது குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த சூரியபிரகாஷ் பார்க்க மிகவும் அழகாக இருப்பான். இதனால் அவனுட்ன் ஓரினச்சேர்க்கை வைத்துக்கொள்ள முயற்சி செய்தேன்.

கடந்த மாதம் மொட்டை மாடியில் தனியாக நின்ற அவனை கட்டிப்பிடித்து முத்தமிட்டு ஓரினச் சேர்க்கைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். பலனில்லை. என்னை தள்ளி விட்டு அவன் வீட்டுக்குள் சென்று விட்டான்.ஓரினச்சேர்க்கை விஷயத்தை அவன் பெற்றோரிடம் கூறி விடுவானோ? என பயந்து தூக்கமின்றி தவித்தேன். ஆனால், அவன் யாரிடமும் சொல்லவில்லை. எனக்கிருந்த பயம் கொஞ்ச நாட்களில் நீங்கியது. மீண்டும் அவனை ஓரினச்சேர்க்கைக்கு பணிய வைக்க நினைத்தேன். இந்நிலையில், கடந்த 20–ந் தேதி எனது மனைவி ஆரவள்ளி குழந்தைகளுடன் அவரது தந்தை ஊரான சி.முட்லூருக்கு சென்று விட்டார். இந்த நேரத்தில் எப்படியாவது சூரியபிரகாசை எனது ஆசைக்கு இணங்க வைக்க திட்டமிட்டேன்.

நாடகம்

21–ந் தேதி அன்று இரவு டியூசன் சென்று வீடு திரும்பிய சூரியபிரகாசை எனது வீட்டுக்குள் தள்ளி கதவை சாத்தினேன். பின்னர் அவனை என்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வற்புறுத்தியபோது அவன் ஒத்துழைக்க மறுத்து சத்தம்போட்டான். இதனால் அவன் தலையில் உருட்டு கட்டையால் அடித்தேன். இதில் மயங்கி விழுந்த அவனுடன் உறவு கொள்ள முயன்றேன். அதற்குள் மயக்கம் தெளிந்து அவன் சத்தம் போட்டான். இதனால் ஆத்திரமடைந்த நான் உருட்டுக்கட்டையால் மீண்டும் அவன் தலையில் சரமாரியாக தாக்கி கொன்று விட்டேன். பின்பு அவனது தலைமைய பாலித்தீன் கவரால் மூடி சாக்குமூட்டையில் கட்டினேன்.


பின்னர் நள்ளிரவில் சாக்குமூட்டையில் கட்டப்பட்ட அவனது உடலை வளாகத்துக்கு கொண்டு வந்தேன். அப்போது ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் உடலை எனது ஓட்டலுக்குள் மறைத்து வைத்து விட்டேன். மறுநாள் கந்தசாமியுடன் சேர்ந்து நானும் சூரியபிரகாஷை தேடுவது போல் நாடகமாடினேன். மேலும் போலீசாரின் கவனத்தை திசை திருப்ப ரூ.25 லட்சம் கேட்டு கடத்தல் நாடகமும் நடத்தினேன். இதற்கிடையில் எப்படியாவது பிணத்தை வெளியே கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில் துர்நாற்றம் வீச தொடங்கியதால் இந்த கொலை வழக்கில் நான் சிக்கி கொண்டேன்.இவ்வாறு ஜவகர்பாபு கூறியுள்ளான்.இதனையடுத்து ஜவகர்பாபுவை கைது செய்து சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச் சம்பவம் சிதம்பரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.