ஜில்லா 100-வது நாள் விழா விஜய் பங்கேற்பு

விஜய்-மோகன்லால்-காஜல் அகர்வால் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜில்லா’. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.டி.நேசன் இயக்கியிருந்தார். டி.இமான் இசையமைத்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார்.

                                           ஜில்லா 100-வது நாள் விழா: விஜய் பங்கேற்பு

தமிழில் வெற்றியடைந்துள்ள ஜில்லா படம் தற்போது 100-வது நாளை எட்டியுள்ளது. 100-வது நாளை கொண்டாடு விதமாக விழா ஒன்றை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இவ்விழாவை சென்னை ஆல்பட் திரையரங்கில் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொள்கிறார்கள். மேலும் இவ்விழாவில் நினைவு பரிசுகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.