பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமிக்கு பெண் குழந்தை

பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமி தனது 13 வயது ஆண் நண்பணுக்கு பெண் குழந்தையை பெற்று தந்திருக்கிறார். இதன் மூலம் பிரிட்டன் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் இவர்கள் குழந்தை பெற்றுள்ளதாக ஊடகங்கள் கூறியுள்ளன.
                                          பிரிட்டனில் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமிக்கு பெண் குழந்தை

கடந்த வார இறுதியில் 7 பவுண்ட் எடையுள்ள தனது பெண் குழந்தையை பெற்றெடுத்தாக அச்சிறுமி கூறியுள்ளார். தொடக்கப்பள்ளியில் கல்வி பயின்று வந்த போது 11 வயதிலேயே இச்சிறுமி கர்ப்பமடைந்தது தற்போது அக்குழந்தையை பெற்றெடுத்து மிக இளம் வயதில் தாயானவர் என்று பெயர் பெற்றுள்ளார்.

வடக்கு லண்டனில் உள்ள அச்சிறுமியின் வீட்டிற்கு அருகேயுள்ள பையன் ஒருவனுடன் கடந்த ஓராண்டுக்கு மேலாக அச்சிறுமி பழகி வந்திருக்கிறாள். தற்போது இருவரது பெற்றொர்களும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பெற்றோர்கள் கூறுகையில், இருவரும் ஒருவரை காதலித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து தங்கள் குழந்தையை கொண்டு வரப்போகின்றார்கள். எனவே நாங்கள் அவர்களை ஆதரிப்பது எங்களது கடமையாகும் என தெரிவித்துள்ளனர்.

அச்சிறுமியின் தாயாருக்கு 27 வயதே ஆகும் நிலையில் அவர் பாட்டியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.