20 ஓவர் உலக கோப்பை: விராட் கோலி சாதனை

இந்திய வீரர் விராட் கோலி இந்த உலக கோப்பையில் 4 அரைசதம் உள்பட 319 ரன்கள் (6 ஆட்டம்) குவித்துள்ளார். இதன் மூலம் ஒரு 20 ஓவர் உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
                                             20 ஓவர் உலக கோப்பை: விராட் கோலி சாதனை

இதற்கு முன்பு இலங்கையின் தில்ஷன் 2009-ம் ஆண்டு உலக கோப்பையில் 317 ரன்கள் (7 ஆட்டம்) எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அது மட்டுமின்றி ஒரு உலக கோப்பையில் அதிக அரை சதங்கள் விளாசிய ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடனின் சாதனையையும் (4 அரைசதம், 2007-ம் ஆண்டு உலக கோப்பை) கோலி சமன் செய்துள்ளார்.