வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.–சி24 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.–சி24 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும் அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இரு வகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.

                                            
கடந்த ஜூலை 1–ந்தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.–1ஏ என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து அதை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு அனுப்பியது.

அதன் தொடர்ச்சியாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.–2 என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு, அது பி.எஸ்.எல்.வி–சி24 ராக்கெட் மூலம் இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பிஎஸ்எல்வி வரிசையில் வெற்றிகரமாக ஏவப்பட்ட 25 வது ராக்கெட் இதுவாகும். பிஎஸ்.எல்வி ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து இஸ்ரோ தலைவர், பிஸ்.எல்.வி ஏவும் பணிக்கு பாடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பாரட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.–1பி செயற்கைகோள் கடல் வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கு இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 1,500 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும்.இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 வருடம். இதேபோல் இன்னும் 5 செயற்கை கோள்களை கடல் சார் ஆராய்ச்சிக்காக இஸ்ரோ நிறுவனம் அனுப்ப உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.