3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை

மும்பையில் 3–ம் கட்ட தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
                                            

பாராளுமன்ற தேர்தல்

மராட்டியத்தில் வருகிற 24–ந்தேதி மும்பை வடக்கு, மும்பை வடமேற்கு, மும்பை வடகிழக்கு, தென் மத்திய மும்பை ஆகிய தொகுதிகள் உட்பட 19 தொகுதிகளுக்கு 3–ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் மராட்டிய மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

வரும் 24–ந்தேதி மராட்டிய மாநிலத்தில் மும்பை உள்பட 19 தொகுதிகளுக்கு 3–ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. எனவே அந்த நாளில் வாக்காளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மது அருந்திவிட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடும்.

மதுக்கடைகள்

எனவே இதனை தடுக்கும் வகையில் வரும் 22–ந்தேதி மாலை 6 மணியில் இருந்து 24–ந்தேதி மாலை 6 மணி வரை மும்பை மற்றும் தேர்தல் நடைபெறும் 19 தொகுதிகளிலும் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்களை மூட வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.