உறவினர் டாக்டரால் 4 வருடங்களாக கற்பழிக்கபட்ட பட்டதாரி பெண்

உத்தரபிரதேசம் கவி நகரை சேர்ந்தவர் தயான்சந்த் பஸ்கர் இவர் ஹப்பூர் அருகே உள்ள மருத்துவமனை ஒன்றில் டாக்டராக உள்ளார்.இவர் மீது பட்டாதாரி பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் கொடுத்து உள்ளார்.
                                      


இது குறித்து கூறப்படுவதாவது:-


டாக்டர் தயான்சந்த் வசித்து வரும் பகுதியில் உள்ள ஒரு குடும்பத்துடன் பழகி உள்ளார் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்து உள்ளார். அந்த வீட்டில் 20 வயது நிரம்பிய பி.காம் பட்டாதாரி பெண் இருந்து உள்ளார். டாக்டரை அந்த பெண் மாமா என அழைத்து வந்து உள்ளார்.


டாக்டர் தயான்சந்த் அடிக்கடி வீட்டுக்கு சென்று வந்ததால் பெண்ண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. வீட்டில் உள்ளவர்களுக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. கடந்த 4 வருடங்களாக இளம்பெண்னை தயான் சந்த் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று கற்பழித்து உள்ளார். இந்த விஷயம் கடந்த 13 ந்தேதி தான் வெளிசத்துக்கு வந்து உள்ளது.


வீட்டிற்கு வந்த தயான்சந்த் அந்த பெண்ணை தன்னுடன் வருமாறு அழைத்து உள்ளார். ஆனால் அஅந்த பெண் செல்லவில்லை இதனால் அவரது தாயார் என்ன ஏத்யு என்று விசாரித்து உள்ளார் அப்போது அந்த இளம் பெண் நடந்த விவரங்களை கூறி உள்ளது. இதை தொடர்ந்து டாக்டர் மீது புகார் செய்யபட்டு உள்ளது.