எகிப்தில் 683 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

எகிப்து நாட்டில் முகமது முர்சியின் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து மின்யா நகரில் அவரது சகோதரத்துவ கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர். வன்முறையில் ஏராளமானோர் பலியானார்கள்.                                      

போலீஸ் அதிகாரிகள் தாக்கபட்டனர் இதில் எகிப்தில் தடைசெய்யப்பட்டுள்ள முஸ்லீம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவரான முகமது பாதீக்கும் அவ்வியக்கத்தின் ஆதரவாளர்கள் 700 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டின் நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு தற்போது எகிப்தின் மூத்த மத அதிகாரியான தலைமை முப்தியின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் எடுக்கின்ற முடிவு ஜூன் மாத பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன் இதே நீதிபதி 529 பேருக்கு கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கபட்டது இதில் 40 பேர் மரண தண்டைனையை மட்டும் உறுதி செய்தார்.