எக்ஸ்.டி., திரையரங்கில் கோச்சடையான் டிரைலர்

சினிமாவின் அதி நவீன தொழில்நுட்பம் எக்ஸ்.டி திரையீடு. இந்த தியேட்டரில் திரையிடுவதற்கென்று தனி படங்கள் தயாரிக்கப்படுகிறது. படத்துடன் ஒன்றிணைந்து படம் பார்க்கலாம். அதாவது படத்தில் ரயில் ஓடினால் படம் பார்ப்பவர்களும் ரயிலில் போவது போன்று இருக்கும். படத்தில் மின்னல் வெட்டினால் தியேட்டரிலும் மின்னல் வெட்டும் படத்தில் மழை பெய்தால் தியேட்டருக்குள் சாரல் அடிக்கும். 

                                       Kochadaiyaan releasing on XD Theatre

இத்தகைய தியேட்டரில் திரையிடும் அளவுக்கு நவீன வசதியை பயன்படுத்தி கோச்சடையான் டிரைலர் உருவாக்கப்பட்டு அது சென்னையில் உள்ள ஐ பிளே தியேட்டரில் திரையிடப்படுகிறது.

"கோச்சடையான் டிரைலரில் ரஜினி குதிரை வண்டியில் போகும்போது அவருக்கு பின்னால் நாம் அமர்ந்து செல்வது போன்று இருக்கும் வில்லன்களோடு சண்டை போடும் போது நம் அருகில் வந்தும் நம்மை தாண்டியும் சண்டை போடுவார். இப்படி பல அதிசயங்கள் அந்த டிரைலரில் உள்ளது என்கிறார் ஐ ப்ளே திரையரங்கின் நிர்வாக இயக்குனர் ரவிஷங்கர்.