ஏழாவது தொடரில் அதிசயம் நடக்குமா: கோஹ்லி எதிர்பார்ப்பு

கடந்த ஆறு பிரிமியர் தொடரில் பெங்களூரு அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏழாவது தொடரில் கோப்பை வென்று சாதிக்கும்,’’ என, கேப்டன் விராத் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்தார்.ஏழாவது பிரிமியர் லீக் தொடருக்கான முதற்கட்ட போட்டிகள், ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) வரும் ஏப்., 16ம் தேதி துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள பெங்களூரு அணி, கடந்த ஆறு தொடர்களில் இரண்டு முறை (2009, 2011) பைனல் வரை சென்றது. ஆனாலும் கோப்பை வெல்ல முடியவில்லை.
                                           

இம்முறை விராத் கோஹ்லி தலைமையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கோஹ்லி கூறியது: ஏழாவது பிரிமியர் லீக் தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஏனெனில், தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், பிரிமியர் லீக் தொடரில் ‘ரிலாக்சாக’ விளையாடலாம். இத்தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு நிறைய மகிழ்ச்சி காத்திருக்கிறது. இதனை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு முறையும் பெங்களூரு அணிக்கு கோப்பை வென்று தர முயற்சிப்போம். ஆனால் ஒருமுறை கூட கோப்பை வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம். இம்முறை அணியில் திறமையான வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முயற்சிப்போம்.

இவ்வாறு விராத் கோஹ்லி கூறினார்.