மீண்டும் வெளிவரும் அஜீத்தின் அமர்க்களம்

கடந்த 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜீத்தின் 25-வது படமாக வெளிவந்த 'அமர்க்களம்' பாக்ஸ் ஆபீசில் பெரிய வரவேற்பைப் பெற்றது. சரணின் இயக்கத்திலும், பரத்வாஜின் இசையமைப்பிலும் வெளிவந்த இந்தப் படம் அஜீத்திற்கும் திரையுலகில் ஒரு திருப்புமுனையைத் தந்தது.
                                      மீண்டும் வெளிவரும் அஜீத்தின் அமர்க்களம்

இதுநாள் வரை மென்மையான காதல் ஹீரோவாக காட்சி தந்த அஜீத்திற்கு இந்தப் படம் ஒரு வெகுஜன ஹீரோ தோற்றத்தை ஏற்படுத்தித் தந்தது. அது மட்டுமின்றி இந்தப் படத்தில் திரையில் தனக்கு ஜோடியாக வந்த ஷாலினியை நிஜ வாழ்விலும் பின்னர் அஜீத் கரம் பிடித்து தனது வாழ்க்கைத் துணையாக்கிக்கொண்டார்.

அப்போது ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தப் படம் இப்போது டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு மீண்டும் வெளியிடப்பட உள்ளது என்று திரைத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அஜீத்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் புதிய காப்பி அவரது ரசிகர்களுக்கு சிறந்த கோடைக் கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.