சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் ராக்கெட் பயணம் ரத்து

விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு பொருட்களை எடுத்து செல்வதற்காக ‘ஸ்பேஸ் எக்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்துடன் அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இந்நிறுவனத்தின் மூலம் ஏற்கனவே 2 முறை விண்வெளி மையத்துக்கு விண்கலங்கள் பொருட்களை எடுத்து சென்றுள்ளன.
                                           சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் ராக்கெட் பயணம் ஹீலியம் வாயு கசிவால் ரத்து

அந்த வகையில் 3-வது முறையாக டிராகன் விண்கலத்தின் மூலம் பொருட்கள் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதற்காக ‘பால்கன் 9’ ராக்கெட் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த ராக்கெட் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 4.58 மணிக்கு கேப்கேனவரலில் இருந்து டிராகன் விண்கலத்தை சுமந்து கொண்டு புறப்பட தயாராக இருந்தது. ஆனால், ராக்கெட் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் நடத்தப்பட்ட இறுதிகட்ட சோதனையில், ராக்கெட்டின் முதல் பிரிவில் ஹீலியம் வாயு கசிவு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராக்கெட்டின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.