ஹன்சிகாவிடம் ரசிகர்கள் அத்துமீறல் படப்பிடிப்பு ரத்து

கோவா கடற்கரையில் நடிகை ஜெயப்பிரதா தனது மகன் சித்தார்த்தை வைத்து தயாரிக்கும் உயிரே உயிரே படத்தில் பாடல் காட்சி ஓன்றின் படப்பிடிப்பை கோவாவில் நடத்தினார்கள். ஹன்சிகா, சித்தார்த் வரும் பாடல் காட்சியை மாலை 4 மணி அளவில் படமாக்கினர். இதனை பார்க்க கடற்கரையில் பெரும் கூட்டம் கூடிவிட்டது.
                                       

கடற்கரையில் கூடியிருந்த ரசிகர்கள் ஹன்சிகா ஹன்சிகா என்று அவரது பெயரை கூப்பிட ஆரம்பித்தனர். மேலும் தங்கள் செல்போன்களில் ஹன்சிகாவை புகைப்படம் எடுத்தனர். திடீர் என்று ரசிகர்கள் கூட்டமாக அங்கு இருந்த பாதுகாவலர்களையும் மீறி ஹன்சிகாவின் அருகில் வந்தனர் அபபோது அவர்கள் ஹன்சிகாவிடம் ஆட்டோகிராப் கேட்டனர். ஆர்வக் கோளாறில் சில ரசிகர்கள் ஹன்சிகாவின் கையை பிடித்து இழுத்தனராம். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹன்சிகாவை பாதுகாவலர்கள் மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஹன்சிகா கூறுகையில்

நான் உயிரே உயிரே படப்பிடிப்பில் இருந்தபோது ரசிகர்கள் கூட்டம் கூடியது. நான் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருவதால் அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியாது என்று நினைத்தேன். ஆனால் என்னை குழந்தை நட்சத்திரமாக பார்த்த அவர்கள் அடையாளம் கண்டு என் பெயரைச் சொல்லி அழைத்தனர் என்றார் இந்நிலையில்

ரசிகர்கள் கூட்டம் அத்துமீறலால் படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்யப்பட்டது. பின்னர் வேறு இடத்திற்கு படப்பிடிப்பு மாற்றப்பட்டது