அறிமுகம் செய்தவருக்கு நன்றிக்கடன் செய்த ஹன்சிகா!

படத்துக்குப்படம் படக்கூலியை உயர்த்திக்கொண்டே வந்த ஹன்சிகா, சிம்புவுடன் காதல் வயப்பட்டபோது தனது மார்க்கெட் டல்லடித்ததால், சம்பள விசயத்தை அடக்கி வாசித்தார். ஆனால், மான்கராத்தே வளர்ந்து வரும்போதே ஒரு பரபரப்பு நிலவியதால், இனி கமிட்டாகும் படங்களுக்கு ஒன்னே கால் கோடிக்கு மேல் கேட்க வேண்டும் என்று சில படங்களில் கமிட்டாகாமல் தாமதம் செய்தார்.

                                        hansika reduce salary for her director

பின்னர், ஆர்யாவுடன் மீகாமன், ஜெயம்ரவியுடன் ரோமியோ ஜூலியட் படங்களில் கமிட்டான ஹன்சிகா, ஜெயம்ரவி படத்துக்கு மட்டும் ஒன்னே கால் கோடி சம்பளம் கேட்டவர், ஆர்யா படத்துக்கு பழைய சம்பளமான ஒரு கோடிதான் கேட்டாராம். இதனால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் கமிட்டானவர் ஒரு படத்துக்கு அதிகமாகும், இன்னொரு படத்துக்கு குறைவாகவும் சம்பளம வாங்கியது ஏன்? என்ற கேள்விகள் எழுந்தன.

அதற்கு ஹன்சிகா சொன்ன பதில் என்ன தெரியுமா? ஆர்யா நடித்து வரும் மீகாமன் படத்தை ஜபக் என்பவர் தயாரிக்கிறார். இவர்தான் மாப்பிள்ளை படம் மூலம் என்னை தமிழில் அறிமுகம் செய்தவர். அதனால்தான் அந்த நன்றிக்கடனுக்காக என் சம்பளத்தை அவர் கேட்காமலே நானாக குறைத்துக்கொண்டேன். மற்றபடி இந்த விசயத்தில் ஹீரோக்களை மனதில் கொண்டு வேண்டப்பட்டவர், வேண்டாதவர் என்ற அடிப்படையில் நான் சம்பளத்தை குறைத்துக்கொள்ளவில்லை என்று அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார் ஹன்சிகா.