கவர்ச்சி நடிகையாக மாறும் ஸ்ரீதிவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா.அந்த படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய பெரிய பட்ஜெட் பட வாய்ப்புகள் வந்ததாம், ஆனால் அந்த பட வாய்ப்புகளை எல்லாம் உதரி தள்ளிவிட்டாராம் ஸ்ரீதிவ்யா.
                                      

ஏனென்றால் கவர்ச்சிகரமான கதைகளில் நடிக்க விரும்பாததால் தான் பல பட வாய்ப்புகளை மிஸ் பண்ணிவிட்டாராம்.


இப்படி நான் கவர்ச்சி நாயகியாக நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த ஸ்ரீதிவ்யாவுக்கு திடீரென என்ன ஆனது என்று தெரியவில்லை.
அவர் தற்போது நடித்து வரும் புதிய படங்களில் கூடுதல் கவர்ச்சியாக நடித்து வருகிறாராம். 


இது பற்றி ஸ்ரீதிவ்யா கூறுகையில், முதல் படத்தில் கிராமத்து வேடத்தில் என்னை பார்த்து ரசித்து ஆதரவு தெரிவித்த ரசிகர்கள், இனி என்னை கவர்ச்சி வேடத்திலும் பார்ப்பார்கள்.


இந்த காலத்தில் இயக்குனர்களின் நாயகியாக இருந்தால் தான், சினிமாவில் வளர முடியும் என்பதை உணர்ந்ததால் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.