ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தியாகதுருகம் அருகே ஆழ்துளை கிணற்றுக்காக தோண்டப்பட்ட குழியில், 3 வயது பெண் குழந்தை நேற்று காலை விழுந்தது. சுமார் 28 அடி ஆழத்தில் இருக்கும் அந்த குழந்தையை மீட்க விடிய, விடிய மீட்புகுழுவினர் போராடினர்.
                                       

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயி. இவருடைய மனைவி அஞ்சலை. இவர்களுடைய ஒரே மகள், மதுமிதா (வயது 3).

வீட்டின் அருகேயுள்ள பழனி என்பவரது தோட்டத்தில் விளையாடிய போது மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. 500 அடி ஆழமுள்ள கிணற்றில், குழந்தை 30 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டது.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.ஆழ்துளை கிணற்றுக்கு அருகே மற்றொரு குழியை தோண்டிய வீரர்கள் அதிகாலை குழந்தையை மீட்டனர்.

இருப்பினும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி மதுமிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.