சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு இணையதளத்தில் நுழைவுச் சீட்டு

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) எழுத உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணையதளத்தில் "ஹால் டிக்கெட்" வெளியிடப்பட்டுள்ளது.
                                                             "பட்டதாரி ஆசிரியர் இடங்களில் நிரப்பப்படாமல் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான இடங்களை நிரப்ப தனியாக சிறப்பு தேர்வு நடத்த வேண்டும்" என, மாற்றுத் திறனாளிகள், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் சிறப்பு டி.இ.டி., தேர்வை நடத்த அரசு உத்தரவிட்டது.

மே, 21ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தேர்வு நடக்கிறது. 4,639 பேர் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான, ஹால் டிக்கெட் www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி. இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது