ஒரே நேரத்தில் இரு பெண்களை திருமணம் செய்த வாலிபர். முதலிரவு அறைக்குள் ஒன்றாக சென்ற மனைவிகள்.

சீனாவில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்போ என்ற பகுதியை சேர்ந்தவர் ஷி (வயது 32) இவர் கடந்த 13 ந்தேதி ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார்.இருவரும் தன்னை காதலிப்பதால் இருவரில் ஒருவரை தான் ஏமாற்ற விரும்பவில்லை என்றும், எனவே இருவரின் சம்மதத்தோடு இருவரையும் திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இருபெண்களும் திருமண தினத்தன்று மகிழ்ச்சியுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததாகவும், தாங்கள் இருவரும் ஒற்றுமையாக கடைசிவரை ஷியுடன் வாழ்வோம் என்றும் கூறினர்.

ஷியின் பெற்றோர் இந்த திருமணம் குறித்து கூறியபோது, தங்கள் மகனின் முடிவு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர்.

                                    

திருமண தினத்தன்று இரு மணமகள்களும் ஒன்றாகவே முதலிரவு அறைக்குள் அனுப்பப்பட்டதாக ஷியின் உறவினர்கள் கூறினர்.

இரண்டு பெண்களை திருமணம் செய்தது குறித்து சீன சட்டப்படி குற்றமாகும். இரு பெண்களின் சம்மதத்துடன் ஷி திருமணம் செய்திருந்தாலும், ஒரு திருமணத்தை மட்டுமே சட்டப்படி ரிஜிஸ்டர் செய்ய முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.