பேருந்துக்குள் வைத்து சிறுமி பலாத்காரம்

மத்திய பிரதேசத்தில்; பேருந்துக்குள் வைத்து தலித் சிறுமி 5 பேர் கொண்ட கொடூர கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கிவீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
                                                 

மத்தியபிரதேசம் சிங்குரல்லி மாவட்டத்தில் சித்திக் பகுதியில் தலித் சிறுமி ஒருவர் தனது உறவினார் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒருபேருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சித்திக் பகுதியில் இறங்கிவிடுவதாக கூறி பேருந்தில் இருந்தவர்கள் சிறுமியை ஏறுமாறு கூறினர். இதனையடுத்து சிறுமி பேருந்தில் ஏறினார்.

அந்த பேருந்தில் ஒரு டிரைவர் 2 கிளினர் உள்பட 5 பேர் இருந்தனர். பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் பேருந்தில் இருந்த 5 பேரும் சிறுமியை பலவந்தமாக பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறமி அலறியுள்ளார். அப்போதுஅந்த கும்பல், சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக பேருந்தின் ஜன்ன்ல்களைமூடிவிட்டு பேருந்தை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு 5 பேரும் சிறுமியை மாறிமாறி பலாத்காரம் செய்துள்ளனர்.. பின்னர் சாலையில் தூக்கிவிசிவிட்டு தப்பிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்து ரத்த காயங்களுடன் இருந்த சிறுமியை அருகே இருந்த நல்கதானி கிராமத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனைதொடர்ந்துபோலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அநத் பேருந்து உள்ளூர் வியாபரி ஒருவரின் திருமண வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தது தெரியவந்தது. தற்போது குற்றவாளிகளில் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர் . மேலும் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.