வருகிறது சாம்சங் டேப்லெட்

தகவல்தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் கணிணியின் அளவு சுருங்கிக்கொண்டே வருகிறது. அனைத்து முண்ணனி செல்பேசி நிறுவனங்களும் தங்களுடைய தயாரிப்பாக டேப்லெட் எனப்படும் நவீன செல்பேசியை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இது வெல்பேசி வடிவிலான கணிணயாகும். மேலும் இது கணிணி மற்றும் செல்பேசி ஆகியவற்றின் பயன்களை தன்னகத்தே கொண்டிருக்கும்.
                                          

பல முண்ணனி நிறுவனங்கள் இத்துறையில் கால்பதித்துள்ள நிலையில், முண்ணனி நிறுவனமான சாம்சங்கும் தனது அடுத்த தயாரிப்பாக டேப்லெட்டை வெளியிட முடிவு செய்துள்ளது. 7 இன்ச் அளவில் உருவாக்கப்படவுள்ள இந்த டேப்லெட்டின் மாடல் எண் எஸ்.எம்.டி2558 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1.5 ஜி.பி ரம் பயன்பாட்டுடன் உருவாக்கப்படவுள்ள இந்த டேப்லெட் தயாரிப்பு அனுமதிக்கு காத்திருக்கிறது. அனேகமாக அடுத்த ஆண்டில் இது சந்தைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.