உதட்டுடன் உதடு சேர்த்து எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார்-நடிகை லட்சுமி மேனன்

உதட்டுடன் உதடு சேர்த்து எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று நடிகை லட்சுமி மேனன் கூறினார்.
                                            


பேட்டி

நடிகர் விஷாலின் சொந்தப்பட நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரிÕயும், யு டி.வி. நிறுவனமும் இணைந்து Ôநான் சிகப்பு மனிதன் என்ற படத்தை தயாரித்துள்ளன. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதையட்டி நடிகர் விஷால், நடிகை லட்சுமி மேனன் ஆகிய இருவரும் சென்னையில் இன்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது விஷால் கூறியதாவது:

நான் சிகப்பு மனிதன் படத்தில் பரபரப்பான 2 காட்சிகள் உள்ளன. அதில் ஒன்று கடலுக்கு அடியில் நானும், லட்சுமி மேனனும் நடித்த காட்சி, இன்னொன்று உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்த காட்சி. இது, ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் முத்தக்காட்சி போல் இருக்குமென்று எதிர்பார்க்க வேண்டாம். கதையோடு வருகிற முத்தக்காட்சி இது.

இவ்வாறு விஷால் கூறினார்.

முத்தக்காட்சியில் நடிக்க தயார்

நடிகை லட்சுமி மேனனிடம், விஷாலுடன் மட்டும்தான் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா? அல்லது எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிப்பீர்காளா? என்று நிருபர்கள் கேட்டார்கள்.

அதற்கு பதில் அளித்து லட்சுமி மேனன் கூறியதாவது:

கதைக்கு தேவைப்பட்டால் எல்லா கதாநாயகர்களுடன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடிக்க தயார்.

மேற்கண்டவாறு லட்சுமி மேனன் கூறினார்.