டிப்ளமோ/ பி.இ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 'HLL Lifecare Limited' என்ற மினி ரத்னா பொதுத்துறை நிறுவனத்தின் திருவனந்தபுரம் கிளையில் உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சியில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
                       
                                         

பயிற்சி: Graduate Apprentice

காலியிடங்கள்: 13
துறைகள்: மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், சேஃப்டி மற்றும் ஃபயர் இன்ஜினியரிங், பாலிமர் சயின்ஸ் மற்றும் ரப்பர் டெக்னாலஜி, இண்டஸ்ரியல் இன்ஜினியரிங், லைப்ரரி மற்றும் இந்பர்மேசன் சயின்ஸ்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.04.2014 தேதியின்படி 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

பயிற்சி அளிக்கப்படும் இடம்: திருவனந்தபுரம்

பயிற்சி காலம்: 1 வருடம்

உதவித்தொகை: மாதம் ரூ.7,500

பயிற்சி: Technician Apprentice (Diploma)

காலியிடங்கள்: 14

பயிற்சி காலம்: 1 வருடம்

துறைகள்: மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மெயின்டனென்ஸ், பாலிமர் டெக்னாலஜி

கல்வித்தகுதி.: சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.04.2014 தேதியின்படி 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.5,000

பயிற்சி: Tchnician Apprentice (Vocational)

காலியிடங்கள்: 15

துறைகள்: office Secretaryship, Civil Construction & Maintenance.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.04.2014 தேதியின்படி 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

உதவித்தொகை: மாதம் ரூ.4,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.lifecarehll.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்றுசேர கடைசி தேதி:30.04.2014

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DEPUTY GENERAL MANAGER (HR), HLL LIFECARE LIMITED, HLL BHAVAN, POOJAPPURA,TRIVANDRUM - 695012, KERALA.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.lifecarehll.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.