உறுதியானது அஜீத்- ஐஸ்வர்யா- ஷங்கர் கூட்டணி!

வீரம்’ படத்தை தொடர்ந்து அஜித் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.இதில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா, எமிஜாக்சன் ஆகிய இருவர் நடிக்கவிருக்கிறார்களாம். இந்தப் படம் முடிந்ததும் அஜித் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது.

                                          

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 56வது படம், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 57வது படம், சிவா இயக்கத்தில் 58வது படம் என அஜித் அடுத்தடுத்து நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.

ஆனால் அதுவல்ல உண்மையாம். கௌதம் மேனன் படத்திற்கு பிறகு அஜித் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதே உண்மை. அதாவது இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் ஒரு கதையை அஜித்துக்கு சொன்னாராம். கதை பிடித்துவிடவே உடனடியாக அஜித் அக்கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

மேலும் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கவிருக்கிறாராம். படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடமாம். அது மட்டும் இல்லாமல், ஐஸ்வர்யாராய்க்கும் இரட்டை வேடமாம். அதில் ஒன்று வில்லி வேடம் என்று கிசுகிசுக்கப்படுகின்றன