இன்றும் ஆழ்துளை கிணற்றில் ஒரு குழந்தை தவறி விழுந்தது

கடந்த வாரம் கள்ளக்குறிச்சியில் மதுமிதா என்ற பெண் சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்தாள். நீண்ட போராட்டத்திற்கு பின் அந்த சிறுமி பிணமாகத்தான் மீட்கப்பட்டாள். நேற்றும் சங்கரன்கோவில் அருகே ஹர்சன் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் விரைவான மீட்பு முயற்சி காரணமாக அவன் உயிருடன் மீட்கப்பட்டான்.
                                               இன்றும் ஆழ்துளை கிணற்றில் ஒரு குழந்தை தவறி விழுந்தது

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிடாம்பாளையம் என்ற ஊரை சேர்ந்த துரை-ஜெயலட்சுமி தம்பதியரின் மூன்று வயது ஆண் குழந்தையான சுஜித், இன்று அப்பகுதியிலுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இவனை மீட்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று பேர் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள செய்தி, அப்பணியை செய்பவர்களின் கவனக்குறைவை அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது.

அரசு இவ்விஷயத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். இனிமேலாவது ஆழ்துளை கிணறு தொடர்பாக கடுமையான வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பாகும்.