அருள்நிதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நகைச்சுவை படம்

அருள்நிதி அடுத்து கதாநாயகனாக நடிக்க இருக்கும் படம் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும். நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகி வரும் இதில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
                                  

அறிமுக இயக்குநர் என்.ஜே. ஸ்ரீகிருஷ்ணா படம் குறித்து கூறும்போது, அனைவரும் நல்லவர்களாக வசிக்கும் கிராமத்தில் இருந்து படம் நகருகிறது. அங்கு ஒரு குற்றமும் நடைபெறுவது இல்லை. ஆனாலும் அங்கு ஒரு காவல் நிலையம் இருக்கிறது. படத்தின் கதாநாயகன் ஒரு போலீஸ் அதிகாரியாக அந்த காவல் நிலையத்தில் பணிபுரிகிறார்.

கிராமத்தில் எதிர்பாராத ஒன்று நடைபெறும்பொழுது நடப்பது என்ன என்பதை அடிப்படையாக கொண்டு கதை நகருகிறது என்று தெரிவித்துள்ளார். அவர், நீங்கள் நல்லது செய்து கொண்டு இருக்கும்பொழுதும் அடுத்து நடைபெறுவது குறித்து யோசிக்க வேண்டும் என்பதை தெரியப்படுத்துவதற்கு நாங்கள் முயற்சி செய்துள்ளோம்.

அது இந்த படத்தில் வேறுபட்ட வகையில் இணைக்கப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த படத்தில் புதிய இசை அமைப்பாளராக ரஜின் என்பவரை ஸ்ரீகிருஷ்ணா அறிமுகம் செய்துள்ளார். படத்தில் சிங்கம்புலி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்த பகவதி பெருமாள் மற்றும் ராஜ்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்