ஆசிரியையை செல்போனில் படம் எடுத்த ஆசிரியர் கைது: கிராம மக்கள் ஆவேசம்; பள்ளிக்கு பூட்டு

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையிடம் தவறாக நடந்ததாக அதிமுக பிரமுகரின் மருமகனும் ஆசிரியருமான குமரகுரு என்பவரை பண்ருட்டி புதுப்பேட்டை போலீசார் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனர்.
                                   
பண்ருட்டியை அடுத்த ஓரையூர் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் குமரகுரு. இவர் பண்ருட்டி தொகுதி அதிமுக துணைச் செயலரான பாண்டியனின் மருமகன் ஆவார். குமரகுரு தான் பணிபுரியும் பள்ளி யில் மாணவிகளிடம், ஆசிரியைகளிடம் இரட்டைப் பொருள் பொதிந்த வாசகங் களை பேசிவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆசிரியை ஒருவ ரிடம் இவர் சமீபகாலமாக அத்துமீறி நடக்க முயன்றுள்ளார். வியாழக்கிழமை தனது செல்போன் மூலமாக புகைப்படம் எடுத்துள்ளார்.


 இதையறிந்த அந்த ஆசிரியை சக ஆசிரியைகளிடம் தெரிவித் துள்ளார். இத்தகவல் மாணவர்கள் மூலம் கிராம மக்களுக்கும் தெரியவர, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு பூட்டு போட்டனர்.
தகவலறிந்து பள்ளி வளாகத்திற்கு வந்த புதுப்பேட்டை எஸ்ஐ கிருஷ்ண மூர்த்தி, கிராம மக்களிடம் சமாதானம் செய்து, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பின்னர் கிராம மக்கள் கலைந்துசென்றனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட ஆசிரியை கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் வழக்குப் பதிவுசெய்து ஆசிரியர் குமரகுருவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.