மீண்டும் சூர்யாவுடன் ஜோடி போடுகிறார் நயன்தாரா!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த கஜினி, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடித்த ஆதவன் ஆகிய படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. அதன்பிறகு ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் அளவுக்கு உசந்து விட்ட நயன்தாரா பின்னர் சூர்யாவுடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை. 

                                                         

ஆனால் செகண்ட் ரவுண்டின் ஆரம்பத்திலேயே அஜீத், ஆர்யா, சிம்பு, ஜெயம்ரவி என்று ஜோடி போட்ட வெற்றித்திலமாக நடைபோட்டுக்கொண்டிருக்கும் நயன்தாராவுக்கு இப்போது மீண்டும் சூர்யாவுடன் டூயட் பாடும் வாய்ப்பு ஒன்று கதவை தட்டியிருக்கிறது. அஞ்சான் படத்தையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்தில்தான் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.


இந்த படத்தில் ஒரு பிரபல இந்தி நடிகையைத்தான் புக் பண்ண திட்டமிட்டனர். ஆனால், அஞ்சான் படத்தில் குத்துப்பாட்டுக்கு நடனமாட எந்த இந்தி நடிகையும் கிடைக்காததால், சூர்யாவுக்கும, இந்தி நடிகைகளுக்கும் ஏழாம் பொருத்தம் என்று நினைத்து இப்போது நயன்தாரா இன்னமும் நச்சென்றுதான் இருக்கிறார். அவரையே நடிக்க வைத்து விடுவோமே என்று கூடிப்பேசி ஒப்பந்தமும் போட்டு விட்டார்கள்.


ஆக, சிம்பு, ஜெயம்ரவியைத் தொடர்ந்து சூர்யாவுடன் ஜோடி போடப்போகிறார் நயன்தாரா. இதற்கிடையே ஆந்திராவில் அவருக்கு நல்ல மவுசு இருந்து கொண்டிருக்கிறது.கைவசம் மூன்று படங்களை வைத்திருக்கும் நயன்தாராவின் கால்சீட்டுக்காக ஆந்திராவாலாக்கள் வரிந்து கட்டிக்கொண்டு திரிவதும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால், நயன்தாராவிடம் சம்பள பேரம் பேசலாம் என்று நினைத்தவர்கள், ஒருவேளை அது நயன்தாராவை டென்சன் பண்ணி விட்டால், கால்சீட் தரமாட்டாரே என்று, அவர் கேட்பதை கொடுப்பதற்கும் தயாராகி விட்டார்களாம்.