தேர்வு எழுத முடியாத ஏக்கத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தேர்வு எழுத முடியாத ஏக்கத்தில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தட்சிண கன்னட மாவட்டம் பண்டுவால் அருகே ராமபதவு கிராமத்தை சேர்ந்தவர் ரவிராஜ். இவரது மகள் தீபிகா (வயது 19). இவர் பண்டுவால் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
                                          

இந்த நிலையில் கடந்த வாரம் இவருக்கு பல்கலைக்கழக தேர்வு நடைபெற்றது. ஆனால் அந்த சமயத்தில் தீபிகா, உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவரால் தேர்வை எழுத முடியவில்லை. தன்னால் தேர்வு எழுத முடியவில்லையே என்று தீபிகா மனமுடைந்து காணப்பட்டார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீபிகா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி பண்டுவால் புறநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று தீபிகாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது தேர்வு எழுத முடியாத ஏக்கத்தில் அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.