நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் பாலியல் தொல்லை:

பெங்களூருவில் உள்ள ஜே.பி.நகர் டாலர்ஸ் லேஅவுட்டில் ஏப்.3-ஆம் தேதி நடைபயிற்சியில் ஈடுப்பட்டிருந்த பெண்ணிடம் அங்கு வந்த இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீஸில் புகார் அளித்தார்.

புகாரை பதிந்த போலீஸார், மண்டியா மாவட்டம் மத்தூரைச் சேர்ந்த ஹொன்னேநாயக்கனஹள்ளியைச் சேர்ந்த வெங்கட்ராம் (24) என்பவரை கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் போலீஸார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.