அமெரிக்காவில் இந்திய பெண்ணை நிர்வாண படமெடுத்து மிரட்டிய இளைஞன் கைது

அமெரிக்காவில் வாழ் இந்தியக் கோடிஸ்வரரான வினோத் கோஸ்லாவின் மகளான நினா கோஸ்லாவை நிர்வாண் படமெடத்து இன்டர்நெட்டில் வெளியிடப்போவதாக மிரட்டிய இளைஞன் கைது செய்யப்பட்டார். நினாவும் அமெரிக்காவை சேர்ந்தவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவருமான டக்லஸ் டார்லோவும் கடந்த இரு ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
                                                  


2007 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே உருவான நட்பு டேட்டிங் செல்லும் அளவுக்கு உயர்ந்தது. பின்னர் 2010 ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே மன வேற்றுமை ஏற்பட்டதால் நினா டார்லோவை விட்டு பிரிந்தார். இருவரும் ஒன்றாக டேட்டிங் சென்றபோது நினாவை நிர்வாணமாக படமெடுத்து வைத்திருந்த டார்லோ அதை காட்டி நினாவை மிரட்டி வந்துள்ளார்.


மேலும் ஒரு படி மேலே போய் நினாவுடைய தாயாரான நீரு கோஸ்லாவுக்கு ஈ-மெயிலில் நினாவின் நிர்வாண படங்களை அனுப்பியுள்ளான். மேலும் கோஸ்லா அறக்கட்டளைக்கு தன்னிடமிருந்து பெற்ற 72000 டாலர் பணத்தை திருப்ப தருமாறும் டார்லோ மிரட்டியுள்ளான். இது குறித்து கோஸ்லா குடும்பத்தினர் அந்நாட்டு சட்ட அமலாக்க பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்ததை தொடர்ந்து கார்லோ மீது வழக்கு பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.