இனியும் தேவைதானா இந்த யுவராஜ்சிங்

6 பந்தில் 6 சிக்சர் அடித்து முத்திரை பதித்த அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் இன்று தனது மோசமான பேட்டிங்கால் இந்திய அணியின் 2–வது 20 ஓவர் உலக கோப்பை வாய்ப்பை தவறவிட்டார்.
                                        21 பந்தில் 11 ரன்: யுவராஜ்சிங் வீடு மீது கல்வீச்சு

2007–ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடந்த முதலாவது 20 ஓவர் உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 6 பந்தில் 6 சிக்சர் அடித்தார். ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தில் யுவராஜ் இந்த அதிரடியை வெளிப்படுத்தினார். இந்தியா உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்தார்.

நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜ்சிங்கின் மோசமான ஆட்டம் தோல்விக்கு முக்கிய பங்கு வகித்தது.

20 ஓவர் போட்டியில் கடைசி சில ஓவர்களை எந்த ஒரு வீரரும் அதிரடியாக அடித்து ஆடுவர். ஆனால் யுவராஜ் சிங்கோ பந்துகளை தேவையில்லாமல் வீணாக்கி ரன்களை குவிக்க தவறிவிட்டார். அவர் 21 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் தான் எடுத்தார். இது அவரது மோசமான ஆட்டமாகும்.

இதேபோல கேப்டன் டோனியும் அதிரடியாக ஆட முடியாமல் திணறினார். அவர் 7 பந்தில் 4 ரன் எடுத்தார். கடைசி 4 ஓவரில் இந்திய அணியால் 19 ரன்களே எடுக்க முடிந்தது. இதுவே தோல்விக்கு காரணமாக அமைந்தது.

அதிரடியாக விளையாடிய வீராட் கோலிக்கு எதிர்முனையில் நின்று பந்துகளை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடைசி 24 பந்துகளில் அவர் 8 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார்.

யுவராஜ்சிங்கின் மோசமான ஆட்டத்தால் நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

சில ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து சண்டிகாரில் உள்ள யுவராஜ்சிங் வீட்டில் கற்களை வீசியுள்ளனர்.

இதற்கு ஹர்பஜன்சிங் கண்டனம் தெரிவித்து உள்ளார். டூவிட்டரில் அவர் கூறும்போது, யுவராஜ்சிங் வீட்டில் கல்வீசிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தோல்விக்கு அவரை மட்டும் குற்றம்சாட்டுவது சரியல்ல. 2 உலக கோப்பையை அவர் பெற்று கொடுத்துள்ளார். அவர் ஒரு அபூர்வமான மேட்ச் வின்னர் என்று கூறியுள்ளார்.