சூரிய மண்டலத்தில் அரிய நிகழ்வு

சூரியன், பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் அதிசய நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் பார்வையிட பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

வானில் பல அரிய நிகழ்வு அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சூரியன் பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றும் இன்று ஒரே நேர் கோட்டில் சந்திக்கின்றன. செவ்வாய் சூரியனை சுற்றி வர 687 நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்றும் பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த மூன்று கிரகங்களின் நேர் கோட்டு அதிசியம் இன்று நிகழ்கிறது. 

கடந்த 2012-ம் ஆண்டில் பூமிக்கு அருகில் செவ்வாய் கோள் வந்த போது அதனுடைய தூரம் 10.08 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அதனையும் விட குறைவாக 9.2 கோடி கிலோமீட்டர் தூரத்திற்குள் வருகிறது. 2016-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி மீண்டும் இந்த அபூர்வ நிகழ்வை நாம் காணமுடியும். அப்போது 7.6 கோடி கிலோமீட்டர் தூரத்திற்குள்ளும், 2050-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி 5.5 கோடி கிலோமீட்டர் தூரத்திற்குள்ளும் வரும் என்றும் கணக்கிடப்பட்டு உள்ளது.