இந்தி படத்தில் நீச்சல் உடையில் தமன்னா

நடிகை தமன்னா கும்ஷகல் என்ற இந்திப் படத்தில் நீச்சல் உடையில் நடிக்கிறார். தமன்னாவுக்கு 24 வயது ஆகிறது. தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இரு மொழிகளிலும் கவர்ச்சிக்கு எல்லைக்கோடு வைத்து இருந்தார். முத்த காட்சியிலும் நீச்சல் உடையிலும் நடிக்க வில்லை. ஆனால் தற்போது முதல் தடவையாக இந்தி படத்தில் நீச்சல் உடையில் வருகிறார்.
                                             இந்தி படத்தில் நீச்சல் உடையில் தமன்னா

சமீபத்தில் இந்தி, தெலுங்கு படங்களில் கலக்கும் இலியானா நீச்சல் உடையில் போஸ் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதனால் அவருக்கு படங்கள் குவிகிறதாம். இந்த போட்டியை சமாளிக்கவே தமன்னா நீச்சல் உடையில் நடிக்கிறாராம். படத்தின் இயக்குனர் சாஜித்கான் தயங்கியபடி நீச்சல் உடையில் நடிக்க முடியுமா என தமன்னாவிடம் கேட்டாராம். அவர் மறுப்பு சொல்லாமல் சம்மதம் தெரிவித்தாராம்.

இந்த படத்தில் சயீப் அலிகான், பிபாசாபாசு, ரிதேஷ் தேஷ்முக் போன்றோரும் நடிக்கின்றனர். இந்த படம் தமன்னாவுக்கு முக்கியத்துவமாக இருக்கும் என்கின்றனர். இதன் மூலம் இந்திப்பட மார்க்கெட்டை பிடிக்க திட்டமிட்டுள்ளார்.