பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர் சாவு

சென்னை பாரிமுனையில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவைச் சேர்ந்த சிவக்குமார் மகன் சரவணன் (17). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.


சரவணன், தனது நண்பரை பார்ப்பதற்காக தரமணிக்கு திங்கள்கிழமை சென்றார். பின்னர் அங்கிருந்து இரவு அரசு பஸ்சில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அந்த பஸ், பாரிமுனை ராஜா அண்ணாமலைமன்றம் அருகே வரும்போது பஸ்ஸில் இருந்து சரவணன் கீழே இறங்க முயன்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த சரவணன் மீது, அந்த பஸ்ஸின் பின்பக்க டயர் ஏறி இறங்கியது.இதில் பலத்த காயமடைந்த சரவணன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிறிது நேரத்தில் இறந்தார். இது குறித்து யானைக்கவுனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.