பஞ்சாப் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் நாளை மோதல்

ஐ.பி.எல். கோப்பையை 2 முறை வென்ற ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகும். 2010, 2011–ம் ஆண்டுகளில் டோனி தலைமையில் சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற்றது.3 முறை இறுதிப் போட்டியில் தோற்றது. அனைத்து ஐ.பி.எல். போட்டியிலும் அரை இறுதியில் நுழைந்து இருந்தது.

                                          பஞ்சாப் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் நாளை மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7–வது ஐ.பி.எல். போட்டியில் கேப்டன் டோனி, ரெய்னா, பிராவோ, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோரை நீட்டித்து கொண்டது. டுபெலிசிஸ், ஹில்பென்ஹாஸ், மொகித் சர்மா ஆகியோரை ஏலத்தில் எடுத்து தக்க வைத்து கொண்டது.

வெய்ன் சுமித், மேக்குல்லம், சாமுவேல் பத்ரி, ஜான் ஹாஸ்டிங்ஸ் ஆசிஷ் நெக்ரா ஆகியோர் சென்னை அணியின் புதிய வரவுகள் ஆகும். மைக்ஹஸ்சி, முரளி விஜய், அல்பி மார்கல் ஆகியோரை கை கழுவி விட்டது.

சென்னை அணி தொடக்க ஆட்டத்தில் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை நாளை சந்திக்கிறது. மாலை 4 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. வெற்றியுடன் சென்னை அணி கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐ.பி.எல். போட்டி குறித்து சென்னை அணியில் கேப்டன் டோனி கூறியதாவது:–

இங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப விளையாடுவது என்பது சவாலானதே என்றாலும் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஒரே மாதிரி நிலைத்தன்மையுடன் விளையாடுவது முக்கியமானது. அரை இறுதிக்கு நுழைவது எங்களது முதல் இலக்காகும். அரை இறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நாக்அவுட் சுற்று மிகவும் முக்கியத்துவம் பெற்றது.

இவ்வாறு டோனி கூறியுள்ளார்.