IPL 7-வது சீசனில்பஞ்சாப் அணி அபார வெற்றி

IPL 7-வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் குவித்தது. 

                                           

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரெண்டன் மெக்கல்லம், மற்றும் ஸ்மித் இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அசத்தினார். பஞ்சாப் அணியின் பந்து வீச்சை விளாசித் தள்ளினர். இதனால் சென்னை அணி 9.3 ஓவரிலேயே 100 ரன்களை கடந்தது.

சென்னை அணியில் அதிகபட்சமாக மெக்கல்லம் 45 பந்துகளில் 4, பவுண்டரி, 5, சிக்சர் உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்மித் 43 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியபஞ்சாப் அணி 19 ஓவரில் 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 43 பந்துகளில் 15 பவுண்டரி, 2 சிக்சருடன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து மில்லர் அபாரமாக விளையாடி பஞ்சாப் அணியை வெற்றியை உறுதி செய்தார்.