தமிழக அரசில் வேலை

டி.என்.பி.எஸ்.சி., சார்பாக தற்சமயம் தமிழக அரசில் காலியாக உள்ள 469அக்கவுண்டண்ட் இடங்களையும், 108 உதவியாளர் இடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.காலியிட விபரங்கள்: தமிழ் நாட்டிலுள்ள கருவூலங்களிலும்,
அக்கவுண்ட்ஸ் துறையிலும் உள்ள 469 அக்கவுண்டண்ட் காலியிடங்களும், வனத்துறையில் காலியாக உள்ள 108 உதவியாளர் காலியிடங்களும் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

                                                     


தகுதி: இந்த 2 பதவிகளுக்குமே ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். இருந்த போதும் காமர்ஸ் பிரிவில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மூலமாக இந்தக் காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு வரும் 29.06.2014 அன்று நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: டி.என்.பி.எஸ்.சி., அமைப்பு ஏற்கெனவே 06.02.2014ல் வெளியிட்ட கம்பைண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வு - II (நேர்காணல் இல்லாத குரூப் IIA)வுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை இல்லை. மற்றவர்கள் ஆன்-லைன் முறையில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.04.2014