சாதனைப் பயணத்தை நோக்கி WhatsApp அப்பிளிக்கேஷன்

மொபைல் சாதனங்களின் மூலம் தொடர்புகளை ஏற்படுத்த உதவும் WhatsApp அப்பிளிக்கேஷனை சில மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக் நிறுவனம் கொள்வனவு செய்திருந்தது.இதன்பின்னர் இந்த அப்பிளிக்கேஷன் பாவனையாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயரத்தொடங்கியுள்ளது.                                  

தற்போது 500 மில்லியனிற்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு சாதனைப்பயணத்தை தொடர்கிறது WhatsApp அப்பிளிக்கேஷன்.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 100 மில்லியனாக காணப்பட்ட பயனர் எண்ணிக்கை நான்கே மாதங்களில் 500 மில்லியனை எட்டியுள்ளது.

இதேவேளை நாள்தோறும் 700 மில்லியனிற்கும் அதிகமான புகைப்படங்கள் பகிரப்படுவதுடன், 100 மில்லியன் வரையான வீடியோக்களும் பகிரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
                               DOWNLOAD WHATSUP CLICK HERE