சென்னை ரயில்நிலையத்தில் குண்டுவெடிப்பு 10 பேர் பலி

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இன்று காலையில் பயங்கர குண்டு வெடித்தது. இதில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும், 6 பேர் பலியானதாகவும் தெரிகிறது. இந்த குண்டுவெடிப்பிற்கு யார் காரணம் என்ற விவரம் அறியப்படவில்லை. சம்பவ இடத்தில் போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
                                          

காலை 7. 40 மணியளவில் கவுகாத்தியில் இருந்து பெங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றதும். இந்த குண்டு வெடித்தது. 9ம் பிளாட்பாமில் இந்த சம்வபவம் நிகழ்ந்துள்ளது.

காயமுற்றோர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 10 க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாக தெரிகிறது. சம்பவ இடத்தில் 6பேர் இறந்துள்னர். ரயில் பெட்டிகள் எஸ். -4 எஸ்- 5 முழுமையாக சேதமடைந்துள்ளன.